பிரியந்த குமாரவின் படுகொலையைக் கண்டித்து பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக போராட்டம்

கொழும்பிலுள்ள பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக இன்று திங்கட்கிழமை அமைதியான முறையில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

பாகிஸ்தான் சியல்கோட் நகரில் இலங்கைப்பிரஜையொருவர் மிகமோசமாக எரித்துக் கொலைசெய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத்தெரிவித்தே சிங்களே தேசிய ஐக்கிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் கொழும்பிலுள்ள பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக அமைதியான முறையில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இப்போராட்டத்தில் தேசப்பற்றாளர்கள் அமைப்பு, மக்கள் சக்தி, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு வலையமைப்பு ஆகிய அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளடங்கலாக சிங்கள, தமிழ், முஸ்லிம் இனங்களைச் சேர்ந்த செயற்பாட்டாளர்கள் கொண்டிருந்தனர்.

அதுமாத்திரமன்றி மிகக்கொடூரமான முறையில் கொல்லப்பட்ட பிரியந்த குமாரவின் குடும்பத்திற்கு நட்டஈடாக பாகிஸ்தான் அரசாங்கம் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதுடன் இச்சம்பவம் தொடர்பில் எழுத்துமூலம் மன்னிப்புக்கோரவேண்டும் என்று அவ்வமைப்பு வலியுறுத்தியுள்ளது.