புதிய ஆணைக்குழு மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளைத் திசைதிருப்புவதற்கான போலியான முயற்சி – மனித உரிமைகள் கண்காணிப்பகம்

இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராய்வதற்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டிருக்கும் புதிய ஆணைக்குழு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளைத் திசைதிருப்புவதற்கான போலியானதொரு முயற்சி என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் சாடியிருக்கிறது.

அத்தகைய முயற்சிகளால் திசைதிரும்பி விடக்கூடாது என்று வலியுறுத்தியிருக்கும் அவ்வமைப்பு, இலங்கையைக் கண்காணிப்பதற்கான புதிய தீர்மானமொன்றை மனித உரிமைகள் பேரவை நிறைவேற்றுவது மிகவும் அவசியமாகும் என்றும் தெரிவித்திருக்கிறது.

இதுகுறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகத்தினால் இன்று சனிக்கிழமை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளது.