மகிந்த – பஸில் நாட்டில் இருந்து வெளியேறுவதை தடுக்க நீதிமன்றத்தில் மனு!

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் உள்ளிட்ட பலர் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தடை விதிக்குமாறு கோரி உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதியோ அல்லது பிரதமரோ தமது உத்தியோகபூர்வ கடமைகளை எங்கு செய்கின்றார்கள் என்பது பொது மக்களுக்கு தெரிவதில்லை என மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பிரதிவாதிகள் நாட்டை விட்டு வெளியேறலாம் என்றும், அதன் மூலம் மனுதாரர்கள் கோரும் தகவல்களை வழங்குவதைத் தவிர்க்கலாம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சிவில் அமைப்புகளை சேர்ந்த சிலர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.