மூன்றாவது நாளாக சபை அமர்வுகளை புறக்கணித்தது ஐக்கிய மக்கள் சக்தி

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று மூன்றாவது நாளாகவும் சபை அமர்வுகளை புறக்கணித்து பாராளுமன்றத்திற்கு முன்பாக எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

பாராளுமன்றத்திற்குள் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் வரை சபை அமர்வுகளில் கலந்துகொள்ளாதிருக்க ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அண்மையில் தீர்மானித்தனர்.

எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார மற்றும் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து மோதல் வலுவடைந்து, மனுஷ நாணயக்காரவிற்கு ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் அச்சுறுத்தல் விடுத்ததாக குற்றம் சுமத்தி எதிர்க்கட்சியினர் இந்த தீர்மானத்தை எடுத்தனர்.