அதிகாரத்தில் உள்ளவர்களின் அலட்சியம் காரணமாக காவல்துறையினரின் அடாவடிகள் தொடர்கின்றன என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.
நேற்று ( 12-11- 22) இடம்பெற்ற மூன்று சம்பவங்கள் இலங்கை பொலிஸார் எவ்வளவு தூரம் தரம்தாழ்ந்துவிட்டனர் என்பதை வெளிப்படுத்தியுள்ளது.
முதலாவது சம்பவம் கையில் பதாகைகளுடன் நடந்துகொண்டிருந்த பெண்களை பொலிஸார் துன்புறுத்தியது.
இரண்டாவது பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பெண்பொஸிஸார் ஒருவரின் கழுத்தின் மீது கையை வைத்து அழுத்துவது.
மூன்றாவதாக சிரேஸ்ட சட்டத்தரணியொருவர் என்னை அழைத்து தனது உதவியாளரை அடையாள அட்டை வைத்திருக்கவில்லை என தெரிவித்து பொலிஸார் கைதுசெய்துள்ளனர் என தெரிவித்தார்.அவரை பொலிஸ் நிலையத்தில் வைத்துள்ளனர்.
பொலிஸாரை கையாளும் அதிகாரம் படைத்தவர்கள் அதிகாரத்தில் உள்ளவர்களின் தோல்வி, மெத்தனப்போக்கினால் காவல்துறையின் ஈவிரக்கமற்ற தன்மைகள் தொடர்கின்றன