அதி விசேட வர்த்தமானியின் பிரகாரம் பிரதமரின் கீழுள்ள புதிய விடயதானங்கள் இதோ..!

பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்டச் செயற்படுத்துகை அமைச்சராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவி பிரமாணம் செய்துக் கொண்டார். பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்டச் செயற்படுத்துகை என்ற புதிய அமைச்சின் கீழ் உள்ளடங்கும் விடயதானங்கள் தொடர்பிலான அதி விசேட வர்த்தமானி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.

சுபீட்சத்தின் நோக்கு தேசிய கொள்கைக்கு அமைய பொருளாதார மேம்பாடு மற்றும் சமூக முன்னேற்றத்தை துரிதப்படுத்தலுக்கான கொள்கை அபிவிருத்தி, திட்டங்களை தயாரித்தல் மற்றும் மேம்படுத்தல் பொருளாதார கொள்கை மற்றும் திட்டச் செயற்படுத்துகை துறை அமைச்சின் விடய எல்லையாக காணப்படுகிறது.

கடமைகளும், பணிகளும்

அரசினால் செயற்படுத்தப்படும் தேசிய கொள்கைகளின் பிரகாரம் பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்டச் செயற்படுத்துகைக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ள சட்டங்கள் மற்றும் ஒழுங்கு விதிகளுக்கு அமைய பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் திட்ட செயற்படுத்துகைக்கு தேவையான திட்டங்களை தயாரித்தல், தேசிய வரவு – செலவு, அரச முதலீடுகள் மற்றும் தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழுள்ள கருத்திட்டங்களை செயற்படுத்துவதற்காக அரச பொறிமுறை மற்றும் தனியார் துறைகளை ஈடுப்படுத்தல்,

பொருளாதார புத்தாக்கம் மற்றும் வறுமை ஒழிப்பு ஜனாதிபதி செயலணி மற்றும் காலநிறை மாற்றங்களுக்கு நிலையான தீர்வுகளுடன் கூடிய பசுமை சமூக பொருளாதாரமொன்றை நாட்டில் உருவாக்குவதற்காக ஜனாதிபதி செயலணியுடன், சகல அமைச்சுக்களையும், ஒன்றினைத்து உரிய நடவடிக்கைகளை வழிநடத்துவதற்கான வசதிகளை வழங்கல்,

கிராமத்துடனான கலந்துரையாடல் கிராமிய அபிவிருத்தி ஜனாதிபதி செயலணியுடன் ஒன்றிணைத்தல், பாவனையாளர்களை போன்று உள்ளுர் உற்பத்தி மற்றும். விநியோகஸ்தர்களுக்கு, சாதாரண விலையின் கீழ் பொருட்கள் மற்றும் சேவைகள் பெறுவதை உறுதி செய்யும் வகையில் வாழ்க்கை செலவுகள் தொடர்பிலான அமைச்சரவை உபகுழுவிற்கு காலத்திற்கு காலம் யோசனைகளை சமர்ப்பித்தல், வாழ்க்கை செலவு மற்றும் பொருட்கள் மற்றும் சேவைகள் பாவனையாளர்கள் நுகர்வதை மேற்பார்வை செய்தல் மற்றும் மீளாய்வு செய்தல்.

மாவட் மற்றும் பிரதேச அபிவிருத்தி குழுக்கள், மற்றும் மாகாண சபைகளின் அபிவிருத்தி, நட்வடிக்கைகளுக்கு ஒன்றிணைந்து மக்கள் மயப்படுத்தப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளை செயற்படுத்தல்.

அதி விசேட முன்னுரிமைகள்

சுபீட்சத்தின் இலக்கு கொள்கை திட்டத்திற்கு அமைய நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்காக தேசிய அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டங்கள் மற்றும் கருத்திட்டங்களை திட்டமிடலும், செயற்படுத்தலும் மற்றும் தேசிய கொள்கையை தயாரித்தல்.

பொருளாதார அபிவிருத்தியின் போது தனியார் துறைகளின் பங்களிப்பை இலகுப்படுத்துவதற்காக அரச மற்றும் தனியார் மற்றும் கூட்டுறவு துறைகளை ஒருங்கிணைப்பு செய்தல், கிராமிய மற்றும் பொருளாதார அபிவிருத்தி கொள்கைகள் மற்றும் உபாய முறைகளை செயற்படுத்தல்,

உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி, சேதன பசளை உற்பத்தி ஒழுங்குப்படுத்தல், உள்ளிட்ட அரசியன் முன்னுரிமை அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டங்கள் ஆகியவற்றை எதிர்பார்க்கும் இலக்கை நோக்கி வழி நடத்துவதற்காக சகல அமைச்சுக்கள், மற்றும் உரிய நிறுவனங்களை ஒருங்கிணைத்தல்.

அடிமட்ட சேவைகள் வழங்கல் வலையமைப்பை வலுவூட்டி கிராமிய மற்றும் பிரதேச பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக சர்வதேச வங்கிகள், நிதியங்கள், மற்றும் உள்ளுர் வங்கிகள் ஆகியவற்றை இணைத்துக் கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்தல்.

உள்ளடக்கப்படும் தாபனங்கள்

பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்டச் செயற்படுத்துணை துறை அமைச்சின் கீழ் தேசிய திட்டமிடல் திணைக்களம், தொகை மதிப்பு , புள்ளிவிபரவியல் திணைக்களம்,கொள்கை கற்கை நிறுவனம், நிலைபேறான அபிவிருத்தி மன்றம்,கொம்பிரோலர் ஜெனரால் அலுவலகம், மதிப்பீட்டுத் திணைக்களம் மற்றும் இலங்கை கணக்குகள் மற்றும் கணக்காய்வு தர மீளாய்வு சபை, இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு நலன்புரி பயனுறுதி சபை, அரசாங்க சேவை பரஸ்பர சகாய நிதியச் சங்கம் ஆகிய 10 தாபனங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கீழ் தற்போது பொருளாதார கொள்கை மற்றும் திட்டச் செயற்படுத்துறை துறை அமைச்சுக்கு மேலதிகமாக புத்தசாசனம் மற்றும் சமயம் மற்றும் கலாசார அலுவல்கள், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சுக்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.