அமைச்சரவை தீர்மானங்களை நிராகரித்தது ஆசிரியர் – அதிபர்கள் தொழிற்சங்கம்

சம்பள பிரச்சினை உள்ளிட்ட தமது கோரிக்கைகள் தொடர்பிலான அமைச்சரவையின் தீர்மானங்களை நிராகரிப்பதாக ஆசிரியர் – அதிபர்களின் ஒன்றிணைந்த தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

ஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாட்டை தீர்க்க அமைச்சரவை அங்கீகாரம் அளிப்பதாக இன்று (31) அறிவிக்கப்பட்டிருந்தது.

அதனடிப்படையில், செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களுக்காக 5,000 ரூபா கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது.

அத்துடன், சம்பள அதிகரிப்பை வரவு செலவுத்திட்டத்தினூடாக கட்டம் கட்டமாக நடைமுறைப்படுத்த அமைச்சரவை அனுமதியளித்திருந்தது.