இந்தியா காசி அமைந்துள்ள “centre for sanatan research சட்டத்தரணி துஷ்யந்தன் திருக்கோணேஸ்வர ஆலய ராஜகோபுர கட்டுமானம்தொல்லியல் துறையினரின் அத்து மீறல் தொடர்பாக வெளிப்படுத்தி இருந்தார்

இந்தியா, உத்திரபிரதேசம், வாரணாசியில் (காசி) அமைந்துள்ள “centre for sanatan research “ அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வுக்கு “ இலங்கையில் இந்து சமயம் “ ( HINDUSIUM IN SRILANKA) எனும் தலைப்பில் ரெலோ கட்சிசார்பில் கடந்த தேர்தலில் போட்டியிட்ட சட்டத்தரணி துஷ்யந்தன் ஆய்வினை சமர்ப்பித்து இருந்தார் ,அதன் பொருட்டு 30/11/2024 – 01/12/2024 இடம்பெற்ற மாநாட்டில் பங்குபற்றுமாறு அவருக்கும் அவரது குழுவினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

இந்தியா, பங்காளதேஷ், பாக்கிஸ்தான், நேபாளம் ஆகிய நாடுகளில் உள்ள புகழ் பெற்ற இந்து ஆலய நிர்வாகிகள், இந்திய அரசின் முக்கிய பிரமுகர்கள், மற்றும் பத்திரிகையாளர்கள் உடனான மாநாட்டிலும் பங்குபற்றியதோடு

அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலும் பங்குபற்றி இலங்கையின் இந்து ஆலயங்களின் மீதான தொல்லியல் துறையினரின் அத்து மீறல் மற்றும் உரிய அரச திணைக்களங்களின் பாராமுகம் ஆகியன தொடர்பாக வெளிப்படுத்தியதோடு

எமது திருக்கோணேஸ்வர ஆலய சூழலில் அத்துமீறி அமைக்கப்பட்ட கடைகளை அகற்றுதல் தொடர்பிலும் ராஜகோபுர கட்டுமானம், மற்றும் தொல்லியல் துறையின் அனுமதி பெறல் போன்றவற்றில் இந்திய அரசானது காத்திரமான பங்களிப்பினை வழங்க வேண்டும் என்பதையும் இந்திய வடமொழி ஊடகங்களுக்கு தெரிவித்து இருந்தார்.