இலங்கையில் ஜனநாயகக்கோட்பாடுகளுக்கும் அரசியலமைப்பிற்கும் அமைவாக மிகவிரைவாக அரசியல் தீர்வு அடைந்துகொள்ளப்படுவதற்கு இந்தியா முழுமையான ஆதரவை வழங்கும் என்று இலங்கையிலுள்ள இந்திய தூதரகம் அறிவித்திருக்கின்றது.
முன்னாள் ஜனாதிபதி இலங்கையிலிருந்து வெளியேறுவதற்கோ அல்லது பயணிப்பதற்கோ ஏதேனுமொரு வகையில் இந்தியா உதவியதாக வெளியாகும் தகவல்களை முற்றாக மறுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை ஜனநாயகக்கோட்பாடுகள், ஜனநாயகக்கட்டமைப்புக்கள் மற்றும் அரசியலமைப்பு என்பவற்றுக்கு அமைவாக சுபீட்சம் மற்றும் அபிவிருத்தி ஆகியவற்றை இலக்காகக்கொண்ட மக்களின் அபிலாஷைகள் அடைந்துகொள்ளப்படுவதை முன்னிறுத்தி இந்தியா எப்போதும் இலங்கை மக்களுடன் உடன்நிற்கும் என்றும் இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.