இலங்கையில் 80 சதவீதத்துக்கும் அதிகமானோர் குறைவான அல்லது மலிவான உணவை உண்கின்றனர் -ஐ.நா. சபை

இலங்கையிலுள்ள குடும்பங்களில் 80 சதவீதத்துக்கும் அதிகமானோர் குறைந்த அல்லது மலிவான உணவை உண்கின்றனர் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

உலக உணவுத் திட்டம் மாதாந்த அறிக்கையில் இலங்கைக் குடும்பங்களில் 80 சதவீதத்துக்கும் அதிகமானோர் மலிவு அல்லது மட்டுப்படுத்தப்பட்ட உணவை உண்பதாகவும், இது ஊட்டச்சத்துக் குறைபாட்டின் அபாயத்தை உயர்த்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக இரண்டு போகங்களிலும் நெல் அறுவடை குறைவதால் உணவுப் பாதுகாப்பின்மை அதிகரிக்கும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாணய மதிப்பிறக்கம் காரணமாக இறக்குமதி செய்யப்பட்ட அரிசியின் விலை 20% அதிகரித்துள்ளதாகவும், வழங்கல் பற்றாக்குறை மற்றும் அதிக உற்பத்திச் செலவு காரணமாக உள்ளூர் அரிசி வகைகளின் விலை 6% அதிகரித்துள்ளதாகவும் அது மேலும் தெரிவித்துள்ளது.