இலங்கை விவகாரத்தை கையாள இந்தியா விசேட பிரதிநிதியாக கர்தீப் சிங் பூரி நியமிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
பூரி 1987ஆம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தம் திறைவேற்றப்பட்டபோது இலங்கைக்கான தூதுவராக இருந்த கே.என்.டிக்சிற்றிற்கு உதவியாக இருந்தவர். தற்போது இந்தியாவில் உள்ள அதிகாரிகளில் இலங்கை விடயத்தை முழுமையாகத் தெரிந்த சிலரில் இவரும் ஓருவர். மூத்த இராஜதந்திரியுமாவார்.
தற்போது இந்திய மத்திய அரசில் ப.ஜ.க அரசின் அமைச்சில் பெற்றோலிய, எரிவாயு நகர கட்டமைப்பு, அமைச்சராகவும் தற்போது செயல்படுகின்றார்.
இதேநேரம் இலங்கை இந்திய ஒப்பந்த காலத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை சுதுமலையில் இருந்து உலங்கு வானூர்தியில் ஏற்றிச் சென்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இருந்தபோதும் இச் செய்தியை சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை