பிரித்தானிய நாடாளுமன்றத்தின் உறுப்பினர்கள் இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றிற்கான பிரித்தானியாவின் அர்ப்பணிப்பு குறித்த பொது விவாதத்தை நடத்துவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் அர்ப்பணிப்பு குறித்த இந்த பொதுவான விவாதம் 2021 மார்ச் 18 வியாழக்கிழமை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய நாடாளுமன்றத்தின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் – சியோபேன் மெக்டோனாக், எலியட் கோல்பேர்ன் மற்றும் சேர் எட்வர்ட் டேவி ஆகியோர் இந்த விவாத யோசனையை முன்வைத்துள்ளனர்.