இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் சந்தா பெறாத தொழிற்சங்கமாக எதிர்காலத்தில் மாற்றியமைக்கப்படும் என தெரிவித்துள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் புதிய தலைவரும், பிரதம அமைச்சரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான், மலையக மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்தும் குரல் கொடுக்கும் என்றார்.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபைக் கூட்டம் நேன்று முற்பகல் கொட்டகலையிலுள்ள சி.எல்.எவ் வளாகத்தில் நடைபெற்றது.
இதன் பின் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
” நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், எமது மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலைமையில் இருந்து அவர்களை மீட்டெடுப்பது தொடர்பில் தேசிய சபையில் ஆராயப்பட்டது. எமது மக்களின் உரிமைகளுக்காகவும், பொருளாதார எழுச்சிக்காகவும் நாம் தொடர்ந்து தீவிரமாக செயற்படுவோம்.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் சந்தா பெறாத சங்கமாக மாறவேண்டும் என்பதே மறைந்த தலைவரின் இலட்சியமும்கூட. அதனை நாம் நிறைவேற்றுவோம். தற்போது சந்தா பெற்றாலும் கணக்கு விவரம் உரியவகையில் காண்பிக்கப்படுகின்றது.
அரசில் இருந்து வெளியேறுவது சம்பந்தமாக இன்று கலந்துரையாடப்படவில்லை. ” – என்றார்.