கப்பல் கட்டியவனையும் அதற்காக தன்னுயிர் நீத்தவனையும் சர்வதேச விசாரணைக்கு கொண்டு செல்ல முனையும் உங்களை காப்பாற்றி காக்க தமிழ் ஈழ விடுதலை இயக்கம் துணை நிற்க முடியுமா? என்று தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) பிரச்சார செயலாளர் சொக்கன் கணேசலிங்கம் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசிய இனத்தின் தாயக விடுதலையை வென்றெடுப்பதற்கு அரசியல் ரீதியான சர்வதேச உள்ளக பொறிமுறையை வென்றெடுப்பதற்கும் தமிழ் தேசிய மக்களின் பேராதரவுடன் கட்டி வளர்த்தெடுக்கப்பட்டதே தமிழ் தேசியக் கூட்டமைப்பு. இதன் உருவாக்கம் பற்றி தாங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள். அது தான் உண்மையும் கூட. தாங்கள் வவுனியாவில் ஆற்றிய உரையில் “தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து ரெலோ வெளியேறினால் மகிழ்ச்சி அளிக்கும்”என்று கூறினீர்கள். அந்த அதிரடியான நிகழ்ச்சித் திட்டத்தை ரெலோ மீது சுமத்தினால் உங்கள் கட்சிக்குள் இருந்து ஏற்படும் பூகம்பத்திற்கு என்ன முடிவு?
சுமத்திரன் ஐயா நீங்கள் புத்திசாலிதான். தமிழ் ஈழ விடுதலை இயக்கம் தமிழ் ஈழ விடுதலைக்காக ஆயுதம் ஏந்திய முதன்முதல் தாய் இயக்கம். தமிழ் ஈழ விடுதலை இயக்கம். தங்கத்துரை, குட்டிமணி, தம்பி பிரபாகரன் கூட இவ்வமைப்பின் வழித்தோன்றலே. தேசிய தளத்திலேயே அன்றுதொட்டு இன்றுவரை ஒற்றுமைக்காக பாடுபட்டு வரும் பெருமைக்குரிய உரிமை கொண்டாடக் கூடிய ஒரு இயக்கம் தமிழ் ஈழ விடுதலை இயக்கம்.
தமிழ் தேசிய விடுதலை மீது தீர்க்கதரிசன மிக்க செயற்பாடுகள் பட்டறிவு கொண்டு நெறிப்படுத்தி நிற்கும். தமிழ் தேசிய சிந்தனை உங்கள் சந்தையில் விலை போகாததால் நீங்கள் சிந்திய சீறிய ரெலோவின் மகிழ்ச்சியான செய்தி உங்களை தரம் உயர்த்தும் என்று, நப்பாசையை தூக்கி எறிந்து தமிழ் மக்கள் மத்தியில் உங்கள் மீது உள்ள வெறுப்புணர்ச்சியை மெருகூட்டும். உங்களின் அநாகரிகமான வெளிபாடுகளுக்கு நாகரீகமாக பதில் அளிப்பது சிறந்தது.
எமது அமைப்பு கட்டுக்கோப்புடன் இருந்து முடிவுகளை எடுப்பதால் தலை இருக்க வால் ஆடுவதில்லை. கொள்கை ரீதியில் தாய் இயக்கமான ரெலோ தமிழ் இனத்தின் விடுதலை இயக்கமான ரெலோ தமிழ் தேசிய அரசியலில் பாம்புக்கு வாலும் மீனுக்குத் தலையையும் காட்டி தப்பிக்கும் விலாங்கு அல்ல.
தமிழ் தேசிய கூட்டமைப்பை ஆரம்பிக்க அந்த ஆரம்பப் புள்ளியை உருவாக்க ஆயுதப் போராட்ட அமைப்புக்களை ஒருங்கிணைக்க நாம் பட்ட துன்பங்களையும் அங்கு ஏற்பட்ட வேதனை வலிகளை அந்நேரம் அப்பணியில் ஈடுபட்டவர்களுக்கு தான் தெரியும்.
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் நோக்கமும் தியாகமும் பணியும் பணிவும் தமிழ்தேசியகூட்டமைப்புக்கு என்றும் தொடரும்.
சுமந்திரனால் வெளியிடப்பட்ட வெட்கக்கேடான வார்த்தைகளை வேதனையுடன் பரிசீலிக்க வேண்டியது தமிழ் இனத்தின் எதிர்கால விடிவுக்கு மட்டுமே.
விடுதலை நோக்கம் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பயங்கரவாத அமைப்பாக உலகில் சித்தரிக்கப்பட்ட புலிகள் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களால் உருவாக்கப்பட்டு பேராதரவுடன் பயணித்துக் கொண்டிருக்கும் தமிழ் ஜனநாயகக் குரல் தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட போது தமிழ் மக்கள் ஆணிவேராக மாறியது.
ஐயா சுமந்திரன் அவர்களே 2010ஆம் ஆண்டு நீங்களும் வேதனையும் வலியும் இன்றி தேசிய பட்டியல் மூலம் அந்தக் கப்பலில் பயணிக்க தொடங்கி விட்டீர்கள். இது உங்களுக்கு கிடைத்த முகவரி. கப்பல் கட்டியவனையும் அதற்காக தன்னுயிர் நீத்தவனையும் சர்வதேச விசாரணைக்கு கொண்டு செல்ல முனையும் உங்களை காப்பாற்றி காக்க தமிழ் ஈழ விடுதலை இயக்கம் துணை நிற்க முடியுமா?
இந்தக் கப்பலில் நீங்கள் ஏறியபின் தமிழ் தேசிய ஒற்றுமை தனம் எவ்வளவு தூரம் சிதறடிக்கப்பட்டு இருக்கிறது என்பதை உணர்வீர்களா?
தமிழ் தேசிய கூட்டமைப்பில் ஆரம்பம் முதல் இன்றுவரை அகரம் போல் விளங்கும் ஆற்றலைக் குறைத்து மதிப்பிடாதீர்கள். தமிழ் தேசியக்கூட்டமைப்பின் ஆரம்ப கல் என்பதை மறந்து விடாதீர்கள்.
ரெலோ தனது பயணத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பை முன்னோக்கி எடுத்துச் செல்லும்.
இறுதியாக சிங்களப் பெரும்பான்மை மூலம்தான் தனது வெற்றி உறுதியானது என்றும் தமிழ் மக்களுக்கு இந்த நாட்டில் பொருளாதார பிரச்சினை மட்டுமே உண்டு என்றும் அது தீர்க்க முடியும் என கூறிய ஜனாதிபதி 2/3 பெரும்பான்மை பலத்துடன் மூன்று வருடங்கள் இருந்தபோதும் தமிழ் தரப்புடன் பேச விரும்பவில்லை.
1948 ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்ததிலிருந்து இன்றுவரை தமிழ் தேசிய இனத்தின் குரல் இலங்கை பாராளுமன்றத்தில் உலகளாவிய ரீதியில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் மேற்கொள்ளப்பட்ட தமிழ் தேசிய இனத்தின் முன் நகர்வுகள் கிடப்பில் கிடப்பதை எண்ணிக் கூடப் பார்க்காத ஜனாதிபதியினை ஆதரித்த பெரும்பான்மை மக்களே தற்சமயம் வீதியில் இறங்கி போராடுகிறார்கள். அவரின் அரசியல் பலமும் பலவீனமடைந்து வரும் நிலையில் தாழ்ந்து கொண்டிருக்கும் கப்பலிலிருந்து சர்வதேசத்தையும் புலம்பெயர் தமிழர்களையும் ஈர்க்கும் முகமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பேச அழைத்த தமிழ் தரப்பு களால் முன்வைக்க மூன்றாம் தரப்பு மத்தியஸ்தியத்தை இல்லாதொழிப்பதும் குறிக்கோளாக வைத்த அரசின் செயற்பாட்டை அரசின் வெளிப்பாடற்ற அழைப்பையும் தமிழீழ விடுதலை இயக்கம் ஜனாதிபதியை சந்திப்பது சாலச் சிறந்ததல்ல என்ற முடிவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் வலியுறுத்தியமை தங்களின் வவுனியா கூட்டத்தின் வெளிபாடாகும்.
தலைவர் பிரபாகரனுடன் இணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அஸ்திவாரம் இட்ட தமிழ்தேசிய பரப்பில் உள்ள அனைத்து தமிழ் தேசிய கட்சிகளையும் ஒருங்கிணைத்து செயல்பட என்றும் தயாராக இருக்கின்றது. அதற்கான வழிகளை உங்கள் பேச்சும் செயல்பாடும் தெளிவுபடுத்தும் மகிழ்ச்சியான செய்திக்கு காத்து நிற்கின்றேன்.