உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலத்தை நீடித்து வர்த்தமானி

உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலம் எதிர்வரும் பெப்ரவரி மாதத்துடன் நிறைவடைய இருந்த நிலையில், அவற்றின் பதவிக் காலத்தை மேலும் ஒரு வருடத்தால் நீடித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

பொது நிர்வாக, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி நகர சபைகள், மாநகர சபைகள் மற்றும் பிரதேச சபைகளின் பதவிக்காலம் 2023 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.

41 நகர சபைகள், 24 மாநகர சபைகள் மற்றும் 275 பிரதேச சபைகளுக்கான தேர்தல் 2018 பெப்ரவரி 10 ஆம் திகதி நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.