உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு உச்ச நீதிமன்றத்துக்கு இன்று வெள்ளிக்கிழமை (13) தெரிவித்துள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழு சார்பில் ஆஜரான சட்டத்தரணி சாலிய பீரிஸ் உச்ச நீதிமன்றத்தில் இதனைத் தெரிவித்தார்.
உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கு எதிரான மற்றும் ஆதரவான மனுக்கள் மீதான விசாரணைகள் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, ஜனத் சில்வா மற்றும் எஸ். துரைராஜா ஆகியோர் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.