மார்ச் மாதத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது இலங்கைக்கு மிகவும் முக்கியமானது என அரசியல் விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உப இராஜாங்க செயலாளர் விக்டோரியா நுலண்ட் குறிப்பிட்டார்.
கொழும்பில் நேற்று (01) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
இலங்கைக்கு வந்துள்ள அமெரிக்காவின் உப இராஜாங்க செயலாளர் விக்டோரியா நுலண்ட், இன்று முற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட சில தரப்பினரை சந்தித்து கலந்துரையாடினார்.
அதனைத் தொடர்ந்து அவர் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தினார்.
இதன்போது, உள்ளூராட்சி மன்ற தேர்தலின் அவசியத்தை அவர் வலியுறுத்தியதுடன், இலங்கையின் ஜனநாயகம் மற்றும் நல்லிணக்கத்தை வலுப்படுத்த வேண்டியதும் அவசியம் என குறிப்பிட்டார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதும், அந்த திருத்தங்களை சர்வதேச சரத்துகளுக்கு அமைவாக வடிவமைப்பதும் அவசியம் என விக்டோரியா நுலண்ட் மேலும் தெரிவித்தார்.
இலங்கையின் மிகப்பெரிய கடன் வழங்குநரான சீனா, கடன் மறுசீரமைப்பு தொடர்பில் நம்பத்தகுந்த பதிலொன்றை வழங்கும் என தாம் எதிர்ப்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.