வௌிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் நீதி – சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஸ ஆகியோர் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் தலைவரை சந்தித்துள்ளனர்.
இந்த சந்திப்பின் போது, பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்பட்டதாக வௌிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார்.
மனித உரிமை நடைமுறைகளை மேம்படுத்துவதில் இலங்கையின் தொடர்ச்சியான ஈடுபாடு மற்றும் தற்போதைய சவால்களை எதிர்கொள்வதற்கான பங்களிப்பு குறித்து கலந்துரையாடப்பட்டதாகவும் அவர் கூறினார்.
உள்நாட்டு பொறிமுறைகளை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் இதன்போது மீண்டும் வலியுறுத்தியதாக வௌிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி குறிப்பிட்டார்.