கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனைய அபிவிருத்தி நாளை ஆரம்பம்

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டம் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோதே அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன இதனை தெரிவித்தார்.

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளதாக தெரிவித்தார்.

முனையம் 1,320 மீட்டர் நீளத்திற்கு நீட்டிக்கப்படும் என்றும், முழு முனையம் 75 ஹெக்டேர் பரப்பளவில் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

மேலும் நாளை ஆரம்பிக்கப்படும் குறித்த திட்டம் 2024 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் திகதி முழுமையடையும் என்றும் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன குறிப்பிட்டார்.