கொழும்பு துறை முக நகர சட்டமூலம் தொடர்பான தீர்ப்பு சபாநாயகருக்கு கிடைக்கப் பெற்றுள்ளது

கொழும்பு துறை முக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றின் தீர்ப்பு சபாநாயகருக்கு கிடைக்கப் பெற்றுள்ளது.

நேற்று (05) மாலை குறித்த தீர்ப்பு சபாநாயகருக்கு கிடைத்ததாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, அது தொடர்பில் எதிர்வரும் 18ஆம் திகதி பாராளுமன்றத்தில் சபாநாயகர் அறிவிக்கவுள்ளாரென தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானத்துக்குப் பின்னர், அந்த சட்டமூலம் தொடர்பான விவாதம் பாராளுமன்றத்தில் 18 மற்றும் 19ஆம் திகதிகளில் நடத்தப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.