இந்தியா – சிறிலங்காவுக்கு இடையில் ஏற்பட்டுள்ள அழுத்தங்களுக்கு மத்தியிலும் இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா சிறிலங்காவிற்கு அவசர விஜயம் மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்காவில் சீனாவின் ஆதிக்கம் தலைதூங்கியுள்ள நிலையில், இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளரின் விஜயம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் எனவும் தகவலகள் வெளியாகியுள்ளன.
ஒக்டோபர் 2ம் திகதி முதல் 5ம் திகதி வரை அவர் சிறிலங்காவில் தங்கிருப்பார் என புது டில்லி அரச வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது. இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட உயர்மட்ட தரப்புகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோர் நியூயோர்க்கில் நடந்த ஐ.நா அமர்வின் போது சந்தித்து பேசியிருந்தனர். இந்நிலையிலேயே, இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.