ஜப்பானிய கரையோர சுய-பாதுகாப்பு படையின் இந்தோ-பசுபிக் செயற்படுத்தல் 2021 (IPD21) அலகைச் சேர்ந்த மாபெரும் கப்பல்களில் ஒன்றான “JS KAGA (DDH-184)” மற்றும் “JS MURASAME (DD-101)” ஆகியன கொழும்பு துறைமுகத்துக்கு 2021 ஒக்டோபர் 2 முதல் 4 வரையான காலப்பகுதியில் நல்லிணக்க விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளன.
இலங்கைக்கு விஜயம் செய்யும் முன்னர், பசுபிக் பிராந்தியத்தைச் சேர்ந்த சில நாடுகளுக்கு JMSDF கப்பல்கள் விஜயம் செய்துள்ளதுடன், பரஸ்பர மற்றும் பல்தேசிய கடல்சார் செயற்பாடுகளின் பங்கேற்றிருந்தன.
முரசாமே மற்றும் காகா ஆகிய இரு போர் கப்பல்களும் இலங்கைக்கு வருகை தருவது, இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கு சிறந்த சந்தர்ப்பமாகும் என ஜப்பான் தூதரகம் தெரிவித்துள்ளது.