பாராளுமன்ற உறுப்பினராக அறிவிக்கப்பட்டுள்ள பிரபல வர்த்தகர் தம்மிக பெரேராவின் வீட்டுக்கு முன்னால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று முற்பகல் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இவர் பஸில் ராஜபக்ஷவின் பாராளுமன்ற ஆசனத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆனால் இவர் வரிகளை முறையாக செலுத்தாதவர் என்று ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.
இதனால் செலுத்தாது இருக்கும் வரிகளை செலுத்துமாறும், பாராளுமன்றத்திற்கு வந்து ஆட்சியாளர்களுக்கு முட்டுக்கொடுக்காதே என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.