முன்னால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட தவறான பொருளாதார முகாமைத்துவ தீர்மானங்களினால் மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட 02 அடிப்படை உரிமை மனுக்களை பரிசீலனை செய்ய வழங்கிய உத்தரவின் அடிப்படையில் விசேட கணக்காய்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது
உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ.பி.சி. விக்ரமரத்ன குறிப்பிட்டார்.
அதற்காக பிரதி கணக்காய்வாளர் நாயகம் ஒருவரின் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
டொலரின் பெறுமதியை 203 ரூபாவாக பேணியமை, சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து உதவி பெறுவதில் தாமதம், இந்த ஆண்டு ஜனவரி 18 ஆம் திகதி 500 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான இறையாண்மை பத்திரங்களை மீளச் செலுத்துவது தொடர்பிலும் இதன்போது கணக்காய்விற்கு உட்படுத்தப்படவுள்ளது.