இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக திருகோணமலை துறைமுகத்தை ஒட்டியுள்ள 100 எண்ணெய் தாங்கிகள் ஏற்கனவே இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
திருகோணமலையிலுள்ள எண்ணெய் தாங்கிகளை இந்தியாவுடன் ஒப்படைக்க முயற்சிப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிப்பதற்காக திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
1987 மற்றும் 2003 ல் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தங்கள் மூலம் குறித்த எண்ணெய் தாங்கிகள் ஏற்கனவே இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டன இந்நிலையில் அவற்றினை மீண்டும் கையகப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக அமைச்சர் உதய கம்மன்பில கூறினார்.
இதேவேளை 85 எண்ணெய் எண்ணெய் தாங்கிகள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் என்ற சோபித தேரரின் கருத்துக்களை நிராகரிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்
இவை அனைத்தும் ஏற்கனவே ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தின் கீழ் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டன என்றும் அமைச்சர் உதய கம்மன்பில கூறினார்.