மாகாணசபை தேர்தலை நடத்துவதா இல்லையா என்பது குறித்து சகல தரப்புடனும் கலந்துரையாடி தீர்மானம் எடுக்கப்படும் என உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை, வாய்மூல விடைகளுக்கான வினாக்கள் நேரத்தில், எதிர்க்கட்சி உறுப்பினர் ரோஹான பண்டார இது குறித்து கேள்வி எழுப்பினார்.
தேர்தல் நடத்தப்படும் என்றால் புதிய முறையில் நடக்குமா அல்லது பழைய முறைமையில் நடத்தப்படுமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன், மாகாணசபை தேர்தலை நடத்துவதற்கான சூழ்நிலை தற்போது இல்லை என கூறினார்.