கிறிஸ்மஸ் தின ஆராதனைகள் மற்றும் அது தொடர்பான விசேட வைபவங்கள் இடம்பெறும் அனைத்து தேவாலயங்களுக்கும் முழுமையான பாதுகாப்பை வழங்குவதற்கு பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
இது தொடர்பில், தேவாலயங்களுக்கு பொறுப்பான பாதிரிமார்கள் மற்றும் போதகர்களை சந்தித்து, கலந்துரையாடி, அதற்கான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்யுமாறு பொலிஸ்மா அதிபர் அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் பணிப்புரை விடுத்துள்ளார்.
கிறிஸ்மஸ் பண்டிகையின்போது தேவாலயங்களுக்குள் நுழையும் சந்தேகத்துக்கிடமான நபர்கள் மற்றும் அந்நியர்களை அடையாளம் காண்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.