எந்தவொரு நாடும் நீதித்துறை நிருவாகத் துறை, சட்டவாக்கல் துறை ஆகிய மூன்று துறைகளினால் ஆளப்பட வேண்டும். இந்த மூன்று துறைகளும் இன்று இலங்கையில் சீர்குலைந்து, ஸ்தம்பிதம் அடைந்திருக்கின்றன என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின்(ரெலோ) செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி தொடர்பில் நேற்றைய தினம் பொத்துவில் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை இடம்பெற்றது. பொத்துவில் மற்றும் திருக்கோவில் பொலிஸ் நிலையங்களின் ஊடாக இவ்வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த விடயத்தைப் பார்க்கும் போது ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கான வழக்காக அது தென்படவில்லை. ஏனெனில் ஏற்கனவே திட்டமிட்டு இந்தப் பொலிஸ் நிலையங்களினால் 32 பெயர்கள் அடங்கிய ஒரே பெயர்ப்பட்டியலைக் கொண்டு இரண்டு பொலிஸ் நிலையங்களிலும் அதே பெயர்கள் உள்வாங்கப்பட்டு இந்த வழக்கு தொடரப்பட்டிருந்தது. ஆனால் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பிரபலமான சிலருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படவில்லை. ஆர்ப்பாட்த்தில் கலந்து கொள்ளாத சிலருக்கு எதிராகவும் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. இதில் விசேடம் என்னவென்றால் செய்தி சேகரிக்க வந்த ஊடகவியலாளர்களுக்கு எதிராகவும் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
இதிலிருந்து தெரிகின்ற விடயம் ஒன்றே தமிழ் மக்கள் அவர்களது உரிமைகளைக் கேட்டுப் போராடும் போது அவர்களை நசுக்குவதற்காக திட்டமிட்டு ஆர்ப்பாட்டம் தொடங்குவதற்கு முன்னமே சிலரது பெயர்களைத் தெரிந்தெடுத்து அவர்களுக்கெதிராக வழங்குத் தொடர்ந்திருக்கின்றாhர்கள். இந்த நாட்டின் எண்ணிக்கையில் சிறுபான்மையினராக இருக்கும் மக்களை நீதித் துறையினூடாக அடக்கும் ஒரு அடக்குமுறையாகவே நாங்கள் பார்க்கின்றோம்.
எந்தவொரு நாடும் நீதித்துறை நிருவாகத் துறை, சட்டவாக்கல் துறை ஆகிய மூன்று துறைகளினால் ஆளப்பட வேண்டும். இந்த மூன்று துறைகளும் இன்று இலங்கையில் சீர்குலைந்து, ஸ்தம்பிதம் அடைந்திருக்கின்றன. ஏனெனில் நீதித்துறை ஒழுங்காகக் செயற்படவில்லை என்பது இவ்hறான வழங்குகள் மூலம் தெரிகின்றது. சட்டவாக்கல் துறை ஒழுங்கில்லை என்பது பாராளுமன்ற நடவடிக்கைகள் குழு பராளுமன்றத்தை மீளக் கூட்டுவதற்கு ஜனவரி 11ம் திகதி என ஒரு தீர்மானத்தை எடுத்திருந்தும், ஜனாதிபதி தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்தக் கூட்டத்தொடரை 18ம் திகதி ஒத்திவைத்திருக்கின்றார். இதனூடாகச் சட்டவாக்கல் துறையும் ஒரு சீரான நிலையில் இல்லை என்பது புரிகின்றது.
நிருவாககத் துறையும் இந்த நாட்டடில் மோசமான நிலையில் இருக்கின்றது என்பது எமது மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் நியமனம் தொடர்பில் ஏற்பட்டுள்ள சீர்கேட்டினைக் கொண்டு அறிய முடியும்.
அத்துடன், ஜனாதிபதியின் செயலாரால் தான் இந்த நாட்டில் நிருவாகம் சிர்குலைந்திருக்கின்றது. நாடு எதிர்நோக்கும் கஸ்டமான சூழ்நிலைகள் அனைத்திற்கும் காரணம் ஜனாதிபதியின் செயலாளர் கொடுக்கும் ஆலோசனைகள் தான் என்ற ரீதியில் அவரை மாற்றுங்கள் அல்லது தன் பதவியை இராஜனாமா செய்யப் போவதாக நாட்டின் ஜனாதிபதியின் சகோதரரும், அமைச்சருமான சமல் ராஜபக்ச அவர்கள் உள்ளிட்ட சிரேஸ்ட அமைச்சர்கள் வேண்டுகொள் விடுத்துள்ளார்கள்.
மட்டக்களப்பு மாநசபையைப் பெருத்த மட்டில் கடந்த முதலாம் திகதி ஆளுநரால் மாநகரசபைக்குப் புதிய ஆணையாளர் நியமிக்கப்படுகின்றார். இருந்த பழைய ஆணையாளருக்கு இடம்மாற்றம் வருகின்றது. புதிய ஆணையாளர் கடமைகளைப் பொறுப்பேற்று அன்று பிற்பகலிலே திருகோணமலைக்கு அழைக்கப்படுகின்றார். மீண்டும் இரண்டு நாட்களுக்குப் பின்பு பழைய ஆணையாளர் திருகோணமலைக்கு அழைக்கப்படுகின்றார். அதேவேளை புதிய ஆணையாளர் காலையில் தன்னுடைய கடமைகளைப் பொறுப்பேற்று தனது உத்தியோகபூர்வ நடவடிக்கைகளிலும் அவர் ஈடுபடுகின்றார். அன்று பிற்பகலில் புதிதாக ஒரு தொலைநகல் வருகின்றது. புதிய ஆணையாளர் மீண்டும் திருகோணமலைக்குச் செல்ல பழைய ஆணையாளர் மீண்டும் மாநகரசபைக்கு பணிக்கு அமர்த்தப்படுகின்றார்.
ஒரு நிருவாகத்தை அரசியல் எந்தளவுக்குக் குழப்புகின்றது என்பதற்கு உதாரணமாக எதிரணி உறுப்பினர் ஒருவரைப் பார்த்து அந்த ஆணையாளர் நமது தலைவர் சாதித்து விட்டார் எந்தவொரு அரசியல்வாதியும் செய்யாத கைங்கரியத்தைச் செய்துள்ளார் என்று கூறுவது இணையத்தளங்களில் பரவியிருக்கின்றது.
அது என்ன கைங்கரியம் ஒரு துஸ்பிரயோகம் நடத்தும் ஆணையாளரை மீண்டும் கொண்டு வந்ததுதான் அந்தக் கைங்கரியம். ஒரு நாட்டின் நிருவாகம் சீர்குiலைந்தால் அந்த நாடு எவ்வாறு அபிவிருத்தியை அடையும் என்பதற்கு இந்த மாநகரசபையில் நடக்கும் நிகழ்வுகளே சான்றாகும்.
மக்களால் தெரிவு செய்யப்பட்ட 38 உறுப்பினர்களைக் கொண்ட மாநகரசபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்டு அமைத்திருக்கும் அந்த ஆட்சியைக் குழப்புவதற்காகவும், இந்த மாவட்டத்திலே மாநகரசபையினால் செய்யப்படும் அபிவிருத்தியைக் குழப்புவதற்காகவும் இப்படியொரு நிருவாக சீர்கேட்டைச் செய்திருக்கின்றார்கள். இது மிகவும் வருந்தத் தக்கதுடன், மாநகர மக்களினால் ஏற்றுக் கொள்ளப்பட முடியாததொன்றாகும் என்று தெரிவித்தார்.