ஜனாதிபதியின் பதவி விலகல் கடிதம் என சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் ஆவணம் போலியானது என ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, சிங்கப்பூரிலிருந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவி விலகல் கடிதத்தை இலங்கைக்கான சிங்கப்பூர் தூதரகம் ஊடாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு அனுப்பியிருந்தார்.
இந்நிலையில், குறித்த கடிதத்தின் சட்டரீதியான செல்லுபடியாகும் தன்மை குறித்து ஆராய்வதாகவும், இது தொடர்பில் இன்று சபாநாயகர் விசேட அறிக்கையொன்றை வெளியிடுவார் எனவும் சபாநாயகர் அலுவலகம் அறிவித்தது.
எவ்வாறாயினும், ஜனாதிபதி அனுப்பியுள்ள கடிதம் இதுவரையில் சபாநாயகரினால் பகிரங்கமாக வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. (