நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகள், முன்பள்ளிகள், பிரிவெனாக்கள் மற்றும் பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
நாட்டில் தற்போது நிலவும் COVID-19 நிலைமையால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் G.L. பீரீஸ் தெரிவித்தார்.
கல்வி நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கான பாரிய பொறுப்பு அரசாங்கத்திடம் காணப்படுகின்ற போதும்,
தற்போதைய நிலையில் மாணவர்களின் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என கல்வி அமைச்சர் தெரிவித்தார்.
சுகாதார நிலைமை வழமைக்கு திரும்பியதன் பின்னர் கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக அறிவித்தல் விடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.