ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று (10) முறைப்பாடு செய்தார்.
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு நனோ நைட்ரஜன் உரத்தை இறக்குமதி செய்ததில் பாரிய நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக சம்பிக்க ரணவக்க எம்.பி, ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்த கருத்து தொடர்பிலேயே இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இந்த முறைப்பாட்டை பதிவு செய்ததன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,
கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஒரு லீற்றர் உரம் டொலர் என்றும் ஒரு லீற்றருக்கு 20 டொலர் மோசடி செய்யப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் மஹிந்தானந்த மற்றும் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ இதற்கு பதிலளிக்க வேண்டும் என்று சம்பிக்க தெரிவித்ததாக மஹிந்தானந்த சுட்டிக்காட்டினார்.
பாட்டலி சம்பிக்க ரணவக்கவிடம் முதலில் தெரிவித்துக் கொள்வது என்னவென்றால், நாங்கள் இந்தியாவில் இருந்து திரவ நைட்ரஜன் உரத்தை இறக்குமதி செய்யவில்லை. நாங்கள் கொண்டு வருவது யூரியா நைட்ரஜன் உரம் என்றார்.
எங்களுக்கு யூரியா நனோ உரம் கொண்டு வர முடியாது என்று தெரிவித்த அவர், இந்த ஊழலுடன் தான் சம்பந்தப்பட்டிருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர் அதற்கெதிராகவே முறைப்பாடளித்துள்ளேன் என்றும் இதைத்ததான் எப்போதும் செய்கின்றனர் என்றும் தெரிவித்தார்.