பாரளுமன்றத்தில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு குழுவாக செயற்பட ரெலோ தலைவர் செல்வம் அழைப்பு

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒரு குழுவாக ஒன்றுபட்டு ஒன்றினைந்து செயற்படுதல் தொடர்பாக
வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் கடிதம் அனுப்பிவைப்பு.

மேற்படி விடயத்தின் தேவையையும் முக்கியத்துவத்தையும் அறிந்து தெளிந்து உணர்ந்து பொதுவான விடயங்களில் ஒன்றுபட்டு செயற்படுவது சாலச்சிறந்தது. இந்த குழுவை நம்மத்தியில் உருவாக்கி செயற்பட தங்கள் ஒவ்வொருவருடைய ஒத்துழைப்பினையும் வேண்டி நிற்கின்றேன். இது தமது இனத்தின் பிரச்சனைகளை சீர்தூக்கிபார்த்து கலந்துரையாடி முடிவுகளை எடுக்க உதவும் என்று நம்புகின்றேன். இவ்வாறான ஓர் குழுவாக பாரளுமன்றத்தில் செயற்பட உங்களது மேலான ஒத்துழைப்பை தருமாறு வேண்டிநிற்கின்றேன்.

நன்றி

கௌரவ.செல்வம் அடைக்கலநாதன் பாராளுமன்ற உறுப்பினர் வன்னி மாவட்டம்.
தலைவர்.
தமிழ் ஈழ விடுதலை இயக்கம் ரெலோ.