பலருடைய மீட்புக்காக உலகில் மனித அவதாரம் எடுத்த இயேசுவின் அன்பை நினைக்கும் இவ் கிறிஸ்துபிறப்பு காலத்தில் நாம் அயலவர்களிடத்தில், மற்றும் மனித உறவுகளில் நம்பிக்கையையும், மன்னிப்பையும், சமாதானத்தையும் ஏற்படுத்துவதுடன் ,பலரின் மீட்புக்காகவும் நல்வாழ்வுக்காகவும் இறைமகன் இயேசு மனித அவதாரம் கொண்டு தனது மக்களை தேடி வந்தது போல நாமும் துன்புறும் நிலையில் உள்ள மனிதர்களை , அவர்களுடைய இக்கட்டான சூழ்நிலைகளில் தேடிச் செல்லவேண்டியவர்களாக இருக்கவேண்டும்.
மேலும் நமது அயலவர்கள் , குடும்பங்கள் மற்றும் சமூகங்களுக்குள் அன்புப் பிணைப்பை ஏற்படுத்தி எமக்குள்ள உறவுகளை வலுப்படுத்துவதுடன், எமக்கிடையே நாம் கொண்டிருக்கின்ற கசப்பான காழ்ப்புணர்வுகளை மறந்து மன்னிப்பின் மக்களாகி பாலக இயேசுவின் பிறப்பின் நற்செய்தி விழுமியங்களை வாழ்வில் கடைப்பிடித்து உலக மாயைக்குள் சிக்கி வன்முறைக்குள் வாழும் வாழ்வை வெறுத்து ஒளியின் மக்களாக வாழ பிறந்திருக்கும் பாலக இயேசு அருள்புரிய பிராத்திப்பதுடன் அனைத்து உறவுகளுக்கும் எனது கிறிஸ்துபிறப்பு நல் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்ளுகின்றேன்.
அ.அடைக்கலநாதன்.
வன்னி பாராளுமன்ற உறுப்பினர்.
தலைவர்.
தமிழ் ஈழ விடுதலை இயக்கம் ரெலோ.