புதிய நியமனங்களால் எனது குரலை யாரும் அடக்க முடியாது” முருத்தெட்டுவே ஆனந்த தேரர் பதிலடி

எவ்வாறான நியமனங்கள் வழங்கப்பட்டாலும் நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்தை, அவர்களுக்கான எனது குரலை யாரும் அடக்க முடியாது என வண.முருத்தெட்டுவே ஆனந்த தேரர்  தெரிவித்துள்ளார்.

முருத்தெட்டுவே ஆனந்த தேரரின் குரலை அடக்கும் நோக்கத்தில் தான் கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தராக இவர் நியமிக்கப்பட்டதாக சில தரப்பினர் தெரிவிக்கின்றனர். எனினும் இதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இந்த பதவி அரச தலைவரின் விருப்பத்தின் பெயரில் தரப்பட்டது. எவ்வாறான நியமனங்கள் வழங்கப்பட்டாலும் எனது குரலை யாரும் அடக்க முடியாது எவ்வாறான வரப்பிரசாதங்களுக்கும் நான் ஏமாந்தவன் இல்லை.

எதனாலும் என்னை ஏமாற்ற முடியாது. எனது குரல் எப்போதும் ஓங்கியிருக்கும். அது இன்றும் நாளையும் எப்போதும் மக்களுக்காக இருக்கும். தவறுகளை தட்டிக்கேட்பேன். சுட்டிக்காட்டுவேன் என்றார்.