மன்னார் மாவட்டத்தில் விளையாட்டு அபிவிருத்திக்கு ஒதுக்கப்பட்ட நிதிக்கு என்ன நடந்தது.

மன்னார் மாவட்டத்தில் விளையாட்டு அபிவிருத்திக்கு ஒதுக்கப்பட்ட நிதிக்கு என்ன நடந்தது.
28/2/2025 வெள்ளிக்கிழமை இன்றைய பாராளுமன்ற உரையில் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்கள்.

மன்னார் மாவட்டத்திலே மூன்று கிராமங்கள் விளையாட்டு மைதானம் உருவாக்குதல் சம்மந்தமாக நிதி ஒதுக்கப்பட்டது.
பள்ளிமுனை, எமில்நகர் மற்றும் நறுவிலிக்குளம் போன்ற கிராமங்களிலே நிதி ஒதுக்கப்பட்டாலும் அந்தந்த மைதானத்தின் வேலைகள் நடைபெறவில்லை.

என்னைப்பொறுத்தமட்டில் அது ஊழல் நடைபெற்றதாகத்தான் சந்தேகப்படுகிறோம். பள்ளிமுனை புனித லூசியா விளையாட்டு மைதான பணிகள் வடமாகாண நகர அபிவிருத்தி அமைச்சின் கீழ் 2013 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட வேலைகள் முதல்கட்ட வேலை மண் நிரப்புதல் முடிவடைந்துள்ள நிலையிலும், அரங்கு அமைத்தல் மற்றும் புல் பதித்தல் போன்ற வேலைகள் நடைபெறுவது தோல்வியடைந்துள்ளது.

20022 ம் ஆண்டு மூன்றாம்கட்ட வேலைக்காக ஒதுக்கப்பட ரூபாய் 51 மில்லியன் பயன்படுத்தப்படவில்லை. அது மீள எடுக்கப்பட்டுள்ளது.

எமில்நகர் கிராமத்தில் விளையாட்டு மைதானம் அமைப்பதற்காக மணல் நிரப்புதல், வடிகால் அமைப்பினை ஏற்படுத்துதல் மற்றும் அரங்கு அமைப்பு ஆகிய வேலைக்கு ரூபாய் 49 மில்லியன் செலவிடப்பட்டு முற்றுப்பெற்றதாக கூறப்பட்ட போதிலும் இதிலே ஒரு ஒருவேலையும் நடைபெறவில்லை இந்த கிணறு காணாமல் போனதுபோல இதிலே பாரிய ஊளல் நடந்திருக்கிறது. இந்த நிதிகள் எடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் வேலைகள் நடைபெறவில்லை. ஆகவே அமைச்சு இதிலே துரித கவனம் எடுக்க வேண்டும் என்று இச்சந்தர்ப்பத்திலே கேட்டுக்கொள்ளுகிறேன்.

நறுவிலிக்குளம் கிராமத்தில் விளையாட்டு மைதானம் கட்டுமாணத்தில் நீச்சல் தடாகம், உட்புற அரங்கம் மற்றும் அரங்கம், 400m ஓட்டப்பாதை, மற்றும் வெளிப்புற வேலைகள் இந்த நிலைபாபாடு ஆய்வு அறிக்கையிலே 60%, 72%,90% என முடிவடைந்ததாக கூறப்பட்டிருக்கிறது. ரூபாய் 37 மில்லியன் ஒதுக்கீட்டுத்தொகையிலே ரூபாய் 143.7 மில்லியன் நிதி செலவிடப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதிலே முக்கிய கவனத்தை செலுத்தி அந்த மைதானத்தை நிறைவு செய்யுமாறு இச்சந்தர்ப்பத்திலே கேட்டுக்கொள்ளுகிறேன்.

பாடசாலை கிரிக்கற் விளையாட்டு மேம்பாட்டிற்காக 7 பாடசாலைகள் இனம்காணப்பட்டு 5 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்ட நிலையிலே 90% வீதமான வேலைகள் முடிவடைந்த போதிலும் பாடசாலை விளையாட்டு மைதான கட்டுமான வேலைகள். பல்வேறு காரணங்களால் முடிக்கப்படாமல் இருப்பதால் இதனை விளையாட்டுத்துறை அமைச்சர் கவனத்தில் எடுத்து இந்த பாடசாலை விளையாட்டு மைதானத்திலே ஒதுக்கப்பட்ட நிதிகளை மீண்டும் ஒதுக்கி நடைமுறைபபடுத்துவதற்கு கோரியிருக்கிறேன்.

நன்றி.

அ.அடைக்கலநாதன்.
வன்னி பாராளுமன்ற உறுப்பினர்.
தலைவர்.
தமிழ் ஈழ விடுதலை இயக்கம் ரெலோ.