மாடு அறுப்பதை தடுத்த மேர்வின் சில்வாவிற்கு நீதிமன்றில் கிடைத்த நற்பெயர்

களனியில் பசு வதையை தடுத்து நிறுத்திய சந்தேகநபருக்கு பிணை தேவையில்லை என தெரிவித்த கொழும்பு கோட்டை மேலதிக நீதவான் கெமிந்த பெரேரா, சந்தேகநபரை நவம்பர் 16ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினால் போதும் என தெரிவித்து முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவை விடுதலை செய்தார்.

2007ஆம் ஆண்டு, தொலைக்காட்சி கூட்டுத்தாபனத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சந்தேகநபரான அமைச்சரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே நீதிவான் இவ்வாறு தெரிவித்தார்.

2007 ஆம் ஆண்டில் ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்குள் அத்துமீறி நுழைந்த சம்பவம் தொடர்பிலேயே அவர் கைதாகியுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்டு வந்த  விசாரணைகளை அடிப்படையாகக் கொண்டு சட்டமா அதிபரின் உத்தரவுக்கமைய அவர் கைதாகியுள்ளார்.