முன்னாள் இந்திய பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங் அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள் -ரெலோ

முன்னை நாள் இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங் அவர்கள் 26/12/2024 வியாழக்கிழமை அன்று தனது 92 வது வயதில் காலமானார்.

அமரர் மன்மோகசிங் அவர்கள் பிரதமராக இருந்த காலத்தில் ஈழத் தமிழர்கள் விடயத்தில் மிகவும் காத்திரமான பங்களிப்பைச் செய்திருந்தமை மறக்கமுடியாததாகும்.

கடந்த 2011 ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடனான அறிறிக்கையில் 13 ம் திருத்தத்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கும் அதில் இருந்தவாறே தொடர்ந்து அதனை கட்டியெழுப்பி எமது தாயகத்தில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு முறமையும் ஏற்படுத்தப்படும் என்ற வாக்குறுதியைப் பெற்றிருந்தவராவார்.

அமரர் மன்மோகசிங் அவர்கள் கடந்த காலங்களில் ஆட்சியில் பிரதமராக இல்லாத சந்தர்ப்பத்திலும் தற்போதைய இந்திய பிரதமர் மோடியைச் சந்திக்கச் சென்ற போது நாம் தமிழ்தேசியம் சார்ந்த கட்சிகளின் சார்பில் மன்மோகன் சிங் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து நன்றி கூறி உரையாடியிருந்ததை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

இந்தியாவின் வளர்ச்சிக்கு குறிப்பாக பொருளாதாரத்தில் இந்தியா அடைந்த வளர்ச்சிக்கு காரணகர்த்தாவாக இருந்த முன்னாள் பிரதமர் மன்மோகசிங் அவர்களது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அஞ்சலியையும் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.

அ.அடைக்கலநாதன்.
வன்னி பாராளுமன்ற உறுப்பினர்.
தலைவர்.
தமிழ் ஈழ விடுதலை இயக்கம் ரெலோ.