கொழும்பு காலிமுகத்திடலில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், ரணில் புதிய ஜனாதிபதியாக தெரிவானதை தொடர்ந்து தமது போராட்டத்தை தீவரப்படுத்தியுள்ளனர்.
இதேவேளை காலிமுகத்திடல் கோட்டா கோ கம போராட்டக்காரர்கள், ஜனாதிபதி செயலகத்தின் முன்பாக உள்ள பண்டாரநாயக்க உருவச்சிலையை சுற்றியுள்ள 50 மீற்றர் சுற்றுவட்டத்திற்குள் நுழையக்கூடாது என கோட்டை நீதிவான் நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.