தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது பதவியை இராஜினாமா செய்வதே பொருத்தமானது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நாட்டை தொடர்ந்து அராஜகம் செய்யாமல் பிரதமர் பதவியை விட்டு விலக வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கங்காராம விகாரையில் இடம்பெற்ற சமய நிகழ்வில் கலந்து கொண்டு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மைத்திரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்தார்.