ஆதி பரம்பொருளான சிவபெருமானுக்கு உகந்த தினமான மகா சிவராத்திரி தினத்தில் சிவபெருமானை நினைத்து மனதாற வழிபட்டு, சிவனின் அருளை பரிபூரணமாக பெற்று உலகு எங்கும் வாழும் இந்து மக்கள் அனைவரும் சிறப்பாக வாழ எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்ளுகின்றேன்.
“மாயை இருள் நீங்கி ஒளி பிரகாசிக்கும்’ என்ற நம்பிக்கையுடன் வாழும் இந்து மக்கள் இந்த சிவராத்திரி நாளில் இரவு முழுவதும் ,விழித்திருந்து விரதமிருந்து தான தருமங்களில் ஈடுபடுகின்றனர்.
இன்றைய மகா சிவராத்திரி நாளை கொண்டாடும் எமது இந்து மக்களின் வாழ்வு சிறக்கவும் ,மக்களுடைய நல்ல எண்ணங்களும், விருப்பங்களும் நிறைவேறி அவர்களின் வாழ்வு வளமிக்கதாகவும் , சிறப்பானதாகவும் அமையவும் இந் நாளில் பிராத்தித்துகொள்ளுவதுடன் எனது வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்ளுகின்றேன்.
அ.அடைக்கலநாதன்
வன்னி பாராளுமன்ற உறுப்பினர்.
தலைவர்.
தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ.