சிறைச்சாலை மறுசீரமைப்பு பதவியிலிருந்து விலகிய இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, ஏனைய அமைச்சுப் பொறுப்பகளில் இருந்து விலகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது இராஜினாமா கடிதத்தில் இந்த விடயம் தெளிவாகக் கூறப்பட்டிருக்கின்றது.
குறிப்பாக இரத்தினக்கல் மற்றும் ஆபரணம் சார்ந்த தொழிற்சாலை இராஜாங்க அமைச்சுப் பதவியிலிருந்து அவர் விலகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அநுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகளை முழந்தாளிடச் செய்து, துப்பாக்கி முனையில் அச்சுறுத்தியதாக கூறப்படும் சம்பவத்தை அடுத்தே, அவர் பதவி விலகியுள்ளார்.
லொஹான் ரத்வத்தவினால் அனுப்பப்பட்ட பதவி விலகல் கடிதத்தை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஏற்றுக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
சிறைச்சாலைகளில் தன்னால் இழைக்கப்பட்ட தவறுக்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டு, பதவி விலகியுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.