15 பேரின் ஆதரவுடன் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் தவிசாளராக ரெலோ விஜிந்தன் தேரிவு!

தமிழ்தேசியக கூட்டமைப்பின் கட்சிகளுக்கிடையில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் புளட் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் க.தவராசா தவிசாளர் பதவியினை வகித்துவந்துள்ளார் இவர் கடந்த 18.03.21 அன்று தனது பதவி விலகலை உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தார்.

இன்னிலையில் புதிய தவிசாளர் பதவிக்கான வாக்கெடுப்பு வடமாகாண உள்ளுராட்சி மன்றங்களின் ஆணையாளர் மரியதாஸ் பற்றிக் டிறஞ்சன், தலைமையில் நடைபெற்றுள்ளது.

தவிசாளர் பதவிற்காக பொதுஜன பெரமுன கட்சி சார்பில் அன்ரனி ரங்கதுசார அவர்களும் தமிழ்தேசியக்கூட்டமைப்பு சார்பில் ரெலோ இளைஞர் அணியின் உறுப்பினர் க.விஜிந்தன் அவர்களும் தவிசாளர் பதவிக்கு போட்டியிட்டுள்ள நிலையில் தவிசாளரின் வாக்கெடுப்பு தொடர்பில் சபை உறுப்பினர்களிடையே விருப்பு கேட்டறியப்பட்டுள்ளது.

இரகசிய வாக்கெடுப்பிற்காக 5 வாக்குகளும் பகிரங்க வாக்கெடுப்பிற்காக 14 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் பகிரங்க வாக்கெடுப்பிற்கு அறிவிக்கப்பட்டது.

பிரதேச சபை உறுப்பினர்களால் தவிசாளரை தேர்ந்ததெடுக்க நடைபெற்ற வாக்கெடுப்பில் மூவர் நடுநிலைமையாக வாக்களித்துள்ளார்கள் அன்ரனி றஞ்கதுசார அவர்களுக்காக நான்கு வாக்குகளும்,கமலகாந்தன் விஜிந்த அவர்களுக்காக 15 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

இந்த வகையில் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் தவிசாளராக கமலநாதன் விஜிந்தன் அவர்கள் 15 வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது இந்த வாக்கெடுப்பினை பார்வையிடுவதற்காக தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் சார்பில், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைமை குழு உறுப்பினரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வினோ நோகராதலிங்கம் அவர்கள், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் மதிப்புறு துரைராசா ரவிகரன் அவர்கள், புதுக்குடியிருப்பு பிரதேசசபை உறுப்பினர்களான ரெலோ க.ஜெனமேஜயந், இ.சத்தியசீலன், இ.சந்திரூபன், சி.குகநேசன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.