இராணுவ வீரராக இருந்த ஜனாதிபதி அவர்களுக்கு விவசாயிகளின் நிலைமை புரியாது. எனவே அரசானது தனது பிடிவாதத்தை கைவிட்டு கொள்கைகளிலும் மாற்றங்களைக் கொண்டு வரவேண்டும் என்று தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைமை குழு உறுப்பினரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வினோ நோகராதலிங்கம் தெரிவித்தார்.
இரசாயன உரம் மற்றும் கிருமிநாசினி வேண்டி மன்னார் மாவட்டத்தின் 174 கமநல சேவை விவசாய அமைப்புக்கள் ஒன்றிணைந்து மன்னார் விவசாய சம்மேளனத்தின் தலைமையில் உயிலங்குளம் பகுதியில் கடந்த மாபெரும் கவனயீர்ப்பு போரட்டம் ஒன்றை கடந்த ஜதிங்கள் கிழமை (25.10.2021) மேற்கொண்டனர்.
இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்
இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கும் போதுமன்னார் மாவட்ட விவசாயிகள் ஒன்று திரண்டு இரசாயன உரம் மற்றும் கிருமி நாசினி வேண்டி போராட்டத்தில் குதித்துள்ளனர். இவர்களுடைய போராட்டத்தில் நாங்களும் இவர்களுடன் முழுமையாக இணைந்துள்ளோம்.
இப்பிரச்சனை மன்னார் மாவட்ட விவசாயிகளுக்கு மட்டுமல்ல இந்த நாடு முழுவதும் இவ் பாரிய பிரச்சனையாக இருக்கின்றது.
விவசாயிகளை கைவிட்டால் இந்த நாடு பெரியதொரு வறுமைக்கு தள்ளப்பட்டு விடும்.அரசானது இந்த உரப் பிரச்சனையை விட்டுக்கொடுக்காத நிலையில் அவர்கள் தன்னிச்சையான செயல்பாட்டில் இருந்து வருகின்றனர்.
ஒரு இராணுவ வீரனாக இருந்தவருக்கு விவசாயத்தின் அருமை தெரியாத நிலையே இங்கு காணப்படுகின்றது.ஆகவே அரசானது உரத்தை இறக்குமதி செய்து விவசாயிகளின் போராட்டத்தை நிறுத்துவதற்கான செயல்பாட்டில் இறங்க வேண்டும் என்பதை இந்த நேரத்தில் அரசுக்கு கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.
மன்னார் மாவட்டத்திலுள்ள விவசாய நிலம் சேதன பசளைக்கு இடம்கொடுக்காத நிலை காணப்படுவதால் திடீரென சேதன பசளைக்கு இங்குள்ள நிலத்தை மாற்றுவது ஒரு கடினமான செயல்பாடாகும்.
ஆகவே விவசாயிகள் இவ் நிலத்தை சேதன பசளைக்கு ஏற்ப இவ் நிலத்தை பக்குவப்டுத்தும் வரைக்கும் விவசாயிகளுக்கு இரசாயன பசளையை இந்த நேரத்தில் வழங்க வேண்டு;ம் என நாம் இங்கு கோரி நிற்கின்றோம் என இவ்வாறு தெரிவித்தார்.