இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 300 யை தாண்டியுள்ளது.
நாட்டில் இறுதியாக 8 கொவிட் உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மொறட்டுவை, பிலியந்தலை, சாய்ந்தமருது, கொலன்னாவ, பாணந்துறை, காலி, களுத்துறை
மற்றும் இரத்தினபுரி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 8 பேரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் 4 ஆண்களும், 4 பெண்களும் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, கொவிட் தொற்றினால் இலங்கையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 305ஆக அதிகரித்துள்ளது.