மூன்றரை மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கினார் திருகுமார் நடேசன்!

இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு முன்னிலையில், திருகுமார் நடேசன் மூன்றரை மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இன்று காலை 10 மணிக்கு பிரசன்னமான திருக்குமார் நடேசன், 1:30 வரை வாக்குமூலம் வழங்கியதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தான் சாட்சியமளிப்பதற்கு தயாராகி வராமையினால், ஆவணங்களை கொண்டு வரவில்லை எனவும், ஆவணங்களை கொண்டு வர வேறொரு தினத்தை பெற்றுத்தருமாறும் அவர் ஆணைக்குழுவிடம் கோரியுள்ளார்.

இதையடுத்து, பண்டோரா பேப்பர்ஸ் சர்ச்சையுடன் தொடர்புடைய ஆவணங்களுடன், எதிர்வரும் 15ஆம் திகதி இலஞ்ச, ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.