அமெரிக்காவின் முன்னாள் இராஜாங்க செயலாளர் கொலின் பவெல் இன்று (18) காலமானார்.
84 வயதான கொலின் பவெல், கொவிட் – 19 தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
அவர் முழுமையாக தடுப்பூசிகளை பெற்றிருந்ததாக கூறப்படுகின்றது.
இந்நிலையில், கொலின் பவெலுக்கு சிகிச்சையளித்த மருத்துவத்துறை ஊழியர்களுக்கு அவரது குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.
அத்துடன், அமெரிக்காவின் முன்னிலை அரசியல்வாதிகள் பலருக்கு நம்பிக்கைக்குரிய இராணுவ ஆலோசகராக கொலின் பவெல் செயற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.