ஆப்கானிஸ்தானில் நாடளாவிய ரீதியில் போலியோ தடுப்பு மருந்து முகாம்களை நடத்தவுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.
அடுத்த மாத ஆரம்பத்தில் இந்த முகாம் முன்னெடுக்கப்படவுள்ளதாக யுனிசெஃப் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
போலியோ தடுப்பு மருந்து முகாமை நடத்துவதற்கு தலிபான்களின் முழு ஆதரவு உள்ளதாக யுனிசெஃப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பெண் ஊழியர்கள் போலியோ தடுப்பு மருந்து முகாமில் பங்கெடுக்கவும் முகாமை நடத்துவதற்கு போதிய பாதுகாப்பு வழங்கவும் தலிபான்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக யுனிசெஃப் குறிப்பிட்டுள்ளது.
பல வருடங்களின் பின் முதல்தடவையாக ஆப்கானிஸ்தானில் போலியோ தடுப்பு மருந்து வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.