நல்லூர் பிரதேச சபைகுட்பட்ட வட்டாரம் இரண்டில் ஜே-119 கிராம சேவகர் பிரிவில் கோண்டாவில் சென் செபஸ்ரியார் வீதியில் கடந்த மாதம் ஏற்பட்ட மழைக்குள் மண்வீட்டில் குழந்தைகளுடன் வசித்த குடும்பம் ஒன்று மண்வீடு விழுந்து, சுவர் இடிந்து வீழ்ந்து இருக்க இடமின்றி பாதுகாப்பற்று வாழ்ந்து வந்தது.
இந் நிலைமைகளினை நேரடியாக அவதானித்த வட்டார நல்லூர் பிரதேச சபை உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் நல்லூர் அமைப்பாளருமாகிய மதுசுதன் உலர் உணவுகளையும் தகரங்களையும் தற்காலிகமாக வழங்கி வைத்த போதும் பின்னர் அவர்களின் அவல நிலை நீக்க நடவடிக்கை எடுத்ததன் விளைவாக
ஒரு கொடையாளரான கோடாவில் பிரதேச சமூக சேவககர் ஆன சுராங்கனி அவர்களின் பல லட்ச நிதியுதவி மூலம் ஒரு மாதத்திற்குள்ளாகவே புதிய கல் வீடு அமைக்கப்பெற்று இன்று 07.11.2021 அன்று திறந்து வைக்கப்பட்டு பயனாளிகளான செல்லத்துரை நிசாந்தன் குடும்பத்திடம் மங்கல நிகழ்வுடன் கையளிகப்பட்டது.
இந்நிகழ்வில் பேராடிரியர் க. தேவராஜா , ஆசிரியர் ஞான திருக்கேதீஸ்வரன், முன்னாள் அதிபர் சண் வாமதேவன் ஆகியோர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.