நான்கு முக்கிய வெளிநாட்டு பிரதிநிதிகள் இம்மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.சர்வதேச சமூகத்துடன் இலங்கை தொடர்ந்தும் வலுவான இருதரப்பு உறவுகளைப் பேணி வருவதை இந்த விஜயங்கள் காட்டுவதாக வெளிவிவகார அமைச்சர், பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஹங்கேரியின் வெளிவிவகார அமைச்சர் அமைச்சர் பீட்டர் சிஜார்டோ , துருக்கியின் வெளிவிவகார அமைச்சர் மெவ்லூட் கவுசோக்லு , இங்கிலாந்தின் வெளிவிவகார அமைச்சர் காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகத்தின் இராஜாங்க அமைச்சர் லார்ட் அஹ்மத் மற்றும் கொரியாவின் தேசிய சட்டமன்றத்தின் சபாநாயகர் பார்க் பியோங் ஆகியோர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.