காலிமுகத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 17 பேருக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
சட்டத்தரணிகள் குழுவொன்றினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கொன்னை அடிப்படையாகக் கொண்டே இவர்களுக்கு வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
மகிந்த ராஜபக்ஷ, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, நாமல் ராஜபக்ஷ, சனத் நிஷாந்த, ரோஹித அபேகுணவர்தன, பவித்திரா வன்னியாராச்சி உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இவ்வாறு வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பொதுஜன பெரமுனவின் உள்ளூராட்சி அரசியல்வாதிகள், தொழிற்சங்க பிரதிநிதிகள் சிலருக்கும் வெளிநாடு செல்ல நீதிமன்றத்தினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.